சென்னை-மும்பை இடையே ஆகாச விமான சேவை: தேதி அறிவிப்பு

புதன், 3 ஆகஸ்ட் 2022 (20:32 IST)
இந்தியாவின் புதிய விமான நிறுவனமான ஆகாச விமானம் சென்னை மற்றும் மும்பை இடையே ஒரு செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் விமான சேவையை தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளது 
 
பிரபல தொழிலதிபர் ராகேஷ் என்பவருக்கு சொந்தமான ஆகாச விமானம் தனது முதல் தேவையை ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்க உள்ளது 
 
இந்த விமானம் மும்பை மற்றும் அகமதாபாத் இடையே பயணம் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் பெங்களூரு - கொச்சி விமான சேவை தொடங்க இருப்பதாகவும் ஆகஸ்ட் 19ஆம் தேதி பெங்களூர் - மும்பை சேவை தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் சென்னை மும்பை விமான சேவை செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்