ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நகைகள் திருட்டு விவகாரத்தில் ஒருவர் கைது!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (12:45 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது 60 சவரன் நகை மற்றும் வைரங்கள் உள்பட ஆபரணங்கள் காணாமல் போனதாக நேற்று காவல்துறையில் புகார் அளித்தார். தேனாம்பேட்டை காவல் துறையினர் இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நகைகள் மாயமான விவகாரத்தில் அவரது வீட்டில் வேலை செய்து வந்த ஈஸ்வரி என்ற 40 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் கிடைத்த தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. 
 
ஈஸ்வரியின் சமீபத்திய வங்கி கணக்கின் பரிவர்த்தனை மூலம் அவர் நகைகளை திருடியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து ஈஸ்வரிடம் போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் அவர் நகைகளை என்ன செய்தார் என்பது குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்