காரணம் குறித்து விளக்கம் அளித்த விசாரணை அதிகாரி, “விமானத்தில் நெருப்புக்கான சமிக்ஞையோ, புகையோ வெளியாகவில்லை. பயணிகளில் ஒருவர் ‘நெருப்பு, நெருப்பு’ என தமிழில் கத்தியதால், அதிர்ச்சியடைந்த விமான பணிப்பெண் விமான நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து விமானம் தரையிறக்கப்பட்டது’ என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் சிரித்துக்கொண்டு கூறுகையில், ”சென்னையை சேர்ந்த 30 வயதுடைய என்ஜினியர் ஒருவர், கபாலி திரைபடத்தில் வரும் ’நெருப்புடா’ பாடலை பாடியுள்ளார். அவர் காதில் ஹெட்போனை அணிந்துகொண்டு அவரது உச்சக்குரலில் பாடியுள்ளார்.
ஒருசில தமிழ் வார்த்தைகள் மட்டுமே தெரிந்த அந்த பணிப்பென், குறிப்பாக அவசர காலத்தில் பயன்படுத்தும் வார்த்தைகளை மட்டுமே தெரிந்து வைத்துள்ள அந்த பெண் ‘நெருப்பு’ என்ற வார்த்தையை கேட்டதும் விமான ஓட்டுநருக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்தே விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.