ராம்குமாரின் சொந்த ஊருக்கு அவர் சென்றிருந்த போது, ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டிளித்தார். அதில் “போலீசார் ராம்குமாரின் கழுத்தை அறுத்து விட்டுதான், அவரின் வீட்டிற்கே அழைத்து வந்துள்ளார்கள். ராம்குமாரும், அவரது குடும்பத்தினரும் மிரட்டப்பட்டுள்ளார்கள்.
நான் ராம்குமாரை சிறையில் சந்தித்த போது, அவர் மன அழுத்தத்துடன் இருந்தார். அவரை சுதந்திரமாக பேச என்னிடம் போலீசார் அனுமதிக்கவில்லை. சுவாதி அழைத்துதான் அவர் சென்னைக்கு சென்றதாக என்னிடம் கூறினார். அவர் எதையோ என்னிடம் கூற விரும்பினார். ஆனால் அவரால் பேச முடியவில்லை” என்று பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.