இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா பெறாதா என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்தது. ஒரு சில கருத்துக்கணிப்புகள் அதிமுகவுக்கு எதிராகவே வந்தது. இந்நிலையில் தங்கராஜ் (50) என்ற தீவிர அதிமுக தொண்டர் ஒருவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா முதல்வரானால் தனது விரலை வெட்டி உண்டியலில் காணிக்கை செலுத்துவதாக ராசிபுரம் அருகேயுள்ள முனியப்பன் கோவிலில் வேண்டுதல் வைத்துள்ளார்.
துண்டான தங்கராஜின் விரல் கையில் இருந்து விழாமல் தொங்கியவாறு இருந்துள்ளது. இதனை பார்த்த அவரது நண்பர் ராஜா, தங்கராஜை ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.