தேர்தல் வரை கமல் இருப்பாரா? மைத்ரேயன் கேள்வி

Webdunia
வெள்ளி, 22 ஜூன் 2018 (07:59 IST)
வரும் தேர்தல் வரை கமல்ஹாசன் அரசியலில் தாக்குப்பிடிப்பாரா? என்று அதிமுக எம்பி மைத்ரேயன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 
அதிமுகவின் ராஜ்யசபா எம்பி மைத்ரேயன் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
 
ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்தவுடன் மக்களை சந்திக்க வேண்டிய கமல், தலைவர்களை சந்தித்து வருகிறார். நாங்கள் மக்களை சந்தித்து வருவதால் யாரும் எங்களுக்கு சவாலாக இருக்க முடியாது. தொடர்ந்து தமிழக மக்களுக்காக போராடி வரும் அதிமுக கட்சி ஒன்றுதான் கூட்டணி இல்லாமல் தனித்து நின்று போட்டியிட்டு வெற்றி பெறும் நிலை உள்ளது.
 
மக்களை சந்திக்காமல் தலைவர்களை மட்டும் சந்தித்து வரும் கமல், தேர்தல் வரை இருப்பாரா? என்று பாருங்கள் என்றும் மைத்ரேயன் எம்பி தெரிவித்தார். மைத்ரேயனின் இந்த கருத்துக்கு 'தேர்தலுக்கு பின்னர் யார் இருப்பார்கள், யார் இருக்க மாட்டார்கள் என்பது தெரியும் என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்