அந்த வகையில் அமைச்சர் ஜெயகுமார் உச்சகட்டமாக, ஜெயலலிதா என்கிற அம்மா இல்லாத எங்களுக்கு பிரதமர் மோடிதான் தற்போது ‘டாடி’யாக இருந்து வழி நடத்துகிறார் என பேசி அதிர்ச்சியை கிளப்பினார். இது எதிர்க்கட்சிகளால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், மோடியை டாடினு கூப்பிட்டா என்ன தப்பு? என கேட்டுள்ளார்.
இதற்கு அவர் விளக்கமும் கொடுத்துள்ளார். அதாவது, இந்திரா காந்தியை அன்னைன்னு தானே அழைக்கிறோம். சி.பா.ஆதித்தனாரை தமிழர் தந்தை என்றுதானே சொல்கிறோம். அதேபோல் தேசத்தை பாதுகாப்பவரை தந்தை அதாவது டாடின்னு சொல்றதுல என்ன தப்பு? ஒரு தவறும் இல்லை என கூறியுள்ளார்.