முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மீது முதல்வர் ஜெயலலிதா அனல் கக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை, அண்ணாநகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கோகுல இந்திரா, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மோகனிடம் படுதோல்வி அடைந்தார்.
தேர்தல் நேரத்தில் தமிழகத்தில், பல தொகுதிகளில் மிக சைலெண்டாக வாக்காளர்களுக்கு பணத்தை பட்டுவாடா செய்துவிட்டனர். ஆனால், அதிமுக பண விநியோகம் குறித்த செய்தி மீடியாவில் வெளிவந்தது அண்ணாநகர் தொகுதியில் இருந்து தான் என்பதால், அப்போதே முதல்வர் ஜெயலலிதா கோபத்தை கொஞ்சம் காட்டியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், கோலகுல இந்திரா குறித்து சில ரகசிய தகவல்கள் முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்கு சென்றுள்ளது. இதனையடுத்து, அவரை கார்டனுக்கு வரச்சொல்லி அழைப்பு வந்துள்ளது.
தேர்தலில், வைத்தியலிங்கம், வைரமுத்து என தோல்வி முகத்தில் இருந்தவர்களுக்கு பதவியை வாரிக் கொடுத்த அம்மா நமக்கும் பதவி கொடுக்கப்போகிறார் என மகிழ்ச்சியுடன் சென்றார்.
கோகுல இந்திராவைப் பார்த்து முதல்வர் லெப்ரைட் வாங்கிவிட்டாராம். இதனால் சப்தநாடியும் நடுங்கிப்போன கோகுல இந்திரா ஒரு கட்டத்தில் கண்ணீர் வடித்துள்ளார். இனியும் யாரும் என்னை ஏமாற்ற முடியாது என கூறி, கெட்அவுட் சொல்லி விரட்டப்பட்டார் என அதிமுகவில் இருந்து தகவல் பரவிவருகிறது.
இதனால் கோகுல இந்திரா எதிர்தரப்பு படுகுஷியில் உள்ளது. ஆனால், கோகுல இந்திராவும், அவரது ஆதரவாளர்களும் வெளியில் கூட தலைகாட்டாமல் வீட்டிலே அடைந்து கிடக்கிறார்களாம்.