தாராபுரத்தில் பாமகவினர் போலீஸ் அதிகாரியையே பீர் பாட்டிலால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 15 ஆம் தேதி இரவு தாராபுர காவலர் சந்திரசேகரன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அலங்கியம் சாலை ரவுண்டானா அருகே கூட்டமாக நின்றிருந்த பாமகவினரை கலைந்து செல்லும்படி சந்திரசேகரன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர் பீர்பாட்டிலை உடைத்து காவலரை குத்தியுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர் ஜெயேந்திரன், ராம்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். இதையறிந்த பாமக மாநில துணை பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் அதிமுக நகரச் செயலாளர் காமராஜ் கைது செய்யப்பட்ட 2 பேரை விடுவிக்குமாறு காவல் ஆய்வாளரை மிரட்டியுள்ளனர்.
சொன்ன பேச்சை கேக்கலைன்னா ஊருக்குள் குடியிருக்க முடியாது என அதிமுக நகரச் செயலாளர் அந்த காவலரை மிரட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.