மஞ்சு வாரியரின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை.. செல்பி எடுத்த ரசிகர்கள்..!

Siva

ஞாயிறு, 7 ஏப்ரல் 2024 (10:18 IST)
நடிகை மஞ்சு வாரியரின் காரில் ஒரு பக்கம் பறக்கும் படையினர் சோதனை செய்து கொண்டிருந்த நிலையில் இன்னொரு பக்கம் ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் பறக்கும் படையினர் தீவிர சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

ஆளுங்கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என பேதம் இன்றி பறக்கும் படையினர் சோதனை செய்து வரும் நிலையில் திரையுலகினர்களையும் பறக்கும் படையினர் விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் திருச்சியில் காரில் வந்த போது அவரது காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். ஒரு பக்கம் பறக்கும் படையினர் சோதனை செய்து கொண்டிருந்த நிலையில் இன்னொரு பக்கம் மஞ்சுவாரியரை பார்த்ததும் அவருடன் செல்பி எடுக்க ஆர்வத்துடன் ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்படுத்தியது

இதனை அடுத்து மஞ்சுவாரியரின் காரில் சந்தேகத்திற்கு இடமாக எதுவும் இல்லை என்றவுடன் அவரை பறக்கும் படையினர் சோதனை முடித்து அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்