குடியுரிமை சட்டம்: பாஜக நடிகையின் போலீஸ் புகார்

Webdunia
ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (21:12 IST)
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவில் உள்ள நடிகை ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
 
பாஜகவில் சமீபத்தில் சேர்ந்த பல நட்சத்திரங்களில் ஒருவர் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி. இவர் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகார் ஒன்றை அளித்தார். பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
குடியுரிமை சீர்திருத்தச் சட்டம் குறித்து சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இவ்வாறு தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் வகையில் போராட்டங்கள் நடைபெறுகிறது. இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்