நடிகை பானுப்பிரியா விவகாரம்... திடீர் திருப்பம் .. புகார் கொடுத்த சிறுமியின் தாயார் கைது...!

வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (18:49 IST)
தமிழ் சினிமாவில் முன்னாள் ஹீரோயினாக வலம் வந்தவர் பானுப்பிரியா. இவர் தற்போது பிரபல டிவி சேனல்களில் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். அண்மையில் பானுப்பிரியாவின் வீட்டில் வேலை பார்த்து வந்த 14 வயது சிறுமிக்கு பானுப்பிரியாவின் அண்ணன் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறி அந்த சிறுமியின் தாய் சில நாட்களுக்கு முன்பு , ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டயில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால்  தற்போது இவ்வழக்கின் திடீர் திருப்பமாக புகார் கொடுத்த சிறுமீன் தாயார் பிரபாவதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
துவரை நடந்தவைகள்...

சிறுமியின் தாயார் போலீஸில் கூறியுள்ளதாவது:
 
வீட்டில் குடும்ப சூழ்நிலையின் காரணாமாக எனது மகள் ( 14 ) சந்தியாவை திரைப்பட நடிகை பானுப்பிரியாவின் வீட்டிற்கு வேலைக்காக அனுப்பி வைத்தோம். மாதம் என் மகளூக்கு 10000 ரூபாய் சம்பளம் தருவதாகக் கூறியதால் நாங்கள் ஒப்புக்கொண்டு மகளை அவர்களுடன் அனுப்பி வைத்தோம்.மாதாமாதம் 10,000ரூபார் சம்பளம் தருவதாகவும் வாக்குறுதி அளித்தனர். ஆனால் கடந்த ஒன்றரை வருடமாக மகளுக்கு பேசிய சம்பளத்தைக் கொடுக்கவில்லை. 
 
மேலும் எம் மகள் சந்தியாவுக்கு பானுப்பிரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மனரீதியாகவும் பல தொல்லைகள் தந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட என் மகள் வேறு ஒருவரின் அலைபேசி மூலமாக எனக்கு தொடர்பு கொண்டு நடந்ததை கூறினார்.
 
இதுகுறித்து கேட்பதற்காக நான் கடந்த 18 - 1 -19 அன்று பானுப்பிரியா வீட்டிற்கு சென்றேன். வீட்டில் இருந்தவர்கள் எல்லோரும் உன்னால் ஒன்றும் செய்ய,முடியாது .. எங்களிடம் பணமும் செல்வாக்கும் உள்ளது என்று கூறி என் கழுத்தைப் பிடித்து கேட்டுக்கு வெளியே தள்ளிவிட்டனர்.
 
எனவே இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். பிரபாவதியின் ( சந்தியாவின்  அம்மா) புகார் மனுவை ஏற்றுக்கொண்ட போலீஸார் பானுப்பிரியா மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து போலீஸார் இவ்விவகாரம் குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் தொடர்ந்து விசாரித்ததில் 14 வயதில் வீட்டில் வேலை செய்ய வைத்து கொடுமைப்படுத்தியது உறுதியானது.
 
அதன் பின்னர் குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் பானுப்பிரியா மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு குழந்தைகள் நலகுழு விசாரணைக்குப் பின் பரிந்துரை செய்தனர். அத்துடன் 14 வயது சிறுமையை பணிக்குச் செல்லத்தூண்டியதாக சிறுமியின் அம்மா பிரபாவதியை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளதாகவும் இதுவரை தகவல் வெளியானது.
 
தற்போது பானுப்பிரியா கூறியுள்ளதாவது 
 
’என் தாயாருக்கு தெரிந்த ஒருவர் மூலமாகத்தான் சந்தியா( வேலை செய்த பெண்) எங்கள் வீட்டுக்கு வந்தார்.வேலைகளும் நள்றாக செய்தாள். ஆனால் சில நாட்களாக வீட்டில் பொருட்கள் மற்றும் பணம் திருட்டுப் போனது. அதன் பிறகு சந்தியாவிடம் விசாரித்த போது முதலில் மறுத்துவிட்டு, பின்னர் திருடியவற்றை தன் தாயிடம் கொடுத்துவைத்துள்ளதாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பிரபாவதிக்கு(சிறுமியின் தாய்) போன் செய்து கேமரா, வட்ஸ், ஐபேட் போன்றவற்றை திரும்ப கொண்டுவரச் சொல்லி கேட்டோம். அதை ஒருநாள் கொண்டு வந்து கொடுத்தார் பிரபாவதி. அதன்பின்பு நாங்கள் போலீஸிடம் கூறிய பிறகு நீங்கள் மகளை கூட்டிச்செல்லலாம் என்று சொன்னதற்கு... பிரபாவதி தாமாகவே காவல் நிலையத்திற்கு சென்று பொய்யாக புகார் கூறியுள்ளார்.
 
அதன் பிறகு போலீஸார் சந்தியாவிடம் விசாரித்தபோது “ தன்னை கொடுமை படுத்தவில்லை என்றும், ..நன்றாக பார்த்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.. அவருக்கு 18 வயதுண்ணு சொல்லித்தான் என் வீட்டிற்கு வேலைக்காக அழைத்து வந்தனர். இதெல்லாவற்றையும் பிரபாவதியும் ஒப்புக்கொண்டதுடன்  மகள் திருடியதையும் ஒப்புக்கொண்டார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்’ என்று பானுப்பிரியா கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்