இந்த நிலையில், இவர், கொடைக்கானலில் இருந்து சென்னை செல்ல, மதுரை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் வழக்கம் போல் அவரது உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அவரது கைப்பையில் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது கண்டு திடுக்கிட்டனர். பின்பு அவரை பெருங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவர் இது என கைப்பை அல்ல. நடிகர் கார்திக் உடையது. அதில் துப்பாக்கி தோட்டா இருப்பது தெரியாது என வாதாடினார். ஆனால், இதை ஏற்க மறுத்த போலீசார், கணேசை கைது செய்தனர். பின்பு ஜாமீனில் விடுதலை செய்தனர்.