தண்டனை பயத்தால் அதிகாரம் பெறுவது.. - யாரைச் சொல்கிறார் கமல்ஹாசன்?

திங்கள், 13 பிப்ரவரி 2017 (16:12 IST)
சமீபகாலமாக நடிகர் கமல்ஹாசன், சமூதாயத்தில் நிகழும் பல்வேறு சம்பவங்களுக்கு தன்னுடைய கருத்தை கூறி வருகிறார். 


 

 
தமிழ்நாடு அரசியலை பொறுத்த வரை, முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா ஆகிய இருவருக்கும் இடையே உள்ள மோதல்தான் எல்லோராலும் கவனிக்கப்பட்டு வருகிறது...
 
அந்நிலையில், சமீப காலமாக நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் அரசியல் ரீதியான கருத்துகளையும் தெரிவித்து வருகிறார். ஏற்கனவே அவர், ஓ.பி.எஸ்-ற்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்திருந்தார். தற்போது அவரை மாற்ற வேண்டிய அவசியம் ஏதுவுமில்லை மேலும், சசிகலாவை முதல்வராக்குவதில் எனக்கு உடன்பாடில்லை என பகீரங்கமாக கருத்து தெரிவித்தார்.
 
இந்நிலையில், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “ அதிகாரம் இரண்டு வகையானது. ஒன்று தண்டனை பயத்தால் பெறுவது, மற்றொன்று, அன்பின் செய்கையால் பெறுவது. இது என் மானசீகமான ஹீரோ காந்தி சொன்னது ” எனக்குறிப்பிட்டுள்ளார்.


 

 
விரைவில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை, சசிகலா சந்திக்கவுள்ளதால், முதல்வர் பதவியை அவர் அமர விரும்புவதாக செய்திகள் வெளியாகி வரும் இந்த வேலையில், கமல்ஹாசன் இப்படி கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது...
 

வெப்துனியாவைப் படிக்கவும்