அலைகளை படம் பிடிக்கப் போய், காணாமல் போன இளைஞர் !

Webdunia
வியாழன், 2 ஜனவரி 2020 (20:47 IST)
அமெரிக்காவில் கடல் அலைகளில் ஒரு இளைஞர் சிக்கிக் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
அமெரிக்காவில் உள்ள  கலிப்போர்னியா பகுதியில் சாண்டா குரூஸ் என்ற போனி டூன்  கடற்பகுதியில் பாறையில் அலைகளை சீற்றத்துடன் அடித்து வந்ததால், அதைப் படம் பிடிக்க ஒரு இளைஞர் முயன்றார்.
 
அப்போது, பாறைக்கு மேல் சீறி வந்த கடலலை  அந்த இளைஞரை அடித்துச் சென்றது.
 
இளைஞர் கடலில் விழுந்தது குறித்து கேள்விப் பட்ட கடலோர கடற்பகுதியினர் இளைஞரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்