மனைவியை வீட்டிற்கு அனுப்ப மறுத்த மாமனார் - ஆத்திரத்தில் மாமனாரை வெட்டிய மருமகன்

Webdunia
சனி, 1 செப்டம்பர் 2018 (11:14 IST)
தேனியில் கோபித்துக் கொண்டு தந்தை வீட்டிற்கு சென்ற மனைவியை மாமனார் அனுப்ப மறுத்ததால், மருமகன் மாமனாரை அரிவாளால் வெட்டியுள்ளார்.
தேனி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரகுமார் (34). இவர் அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மனைவியை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில் அவரின் மனைவி கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார்.
 
இதனையடுத்து மனைவியை சமாதானம் செய்து கூட்டி வர, சந்திரகுமார் தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது மாமனார் ரங்கசாமி, மகளை அனுப்ப முடியாது வெளியே போ என மருமகனை அசிங்கப்படுத்தியுள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த சந்திரகுமார் தனது மாமனாரை அரிவாளால் வெட்டியுள்ளார். உடனடியாக ரங்கசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், சந்திரகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மருமகனே மாமனாரை  அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்