இந்நிலையில் ஒமிக்ரான் குறித்து 1963லேயே இத்தாலியில் அன் ஒமிக்ரான் வேரியண்ட் என்ற படம் வெளியாகியுள்ளதாக அதன் போஸ்டரை நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர். ஆனால் ஒமிக்ரான் என்ற பெயரில் இத்தாலியில் வெளியானது ஏலியன் புனைவு படம் என்றும், சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் போஸ்டர் சமீபத்தில் மார்பிங் செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது. முன்னதாக இதேபோல கொரோனா பெயர் காமிக்ஸ் மற்றும் புத்தகங்களில் சில வருடங்களுக்கு முன்னதாகவே இடம்பெற்றிருந்ததாக அப்போது வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.