அப்போது அவர்களது இளைய மகள்(12), பள்ளிக்கு விடுமுறை என்பதால் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அதே பகுதியில் வசிக்கும் ரூபன் என்பவர்(49), அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்ல் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இதனையடுத்து சிறுமியின் தந்தை சுடலைமணி என்பவர் வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் இப்புகாரின் அடிப்படையில் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்ட ரூபனை போலீஸார் கைதுசெய்து, போக்சொ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.