உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்க தமிழக முதல்வருக்கு அழைப்பு!

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (17:30 IST)
உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் தொடக்க நாள் விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
ஜனவரி 13 முதல் 29-ஆம் தேதி வரை உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
 
சென்னை தலைமைச் செயலகத்தில் ஒடிசா மாநில அமைச்சர் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். ஜனவரி மாதம் நடைபெற உள்ள ஆண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி போட்டியை காண வருகை தருமாறு ஒடிசா மாநில முதல்வரின் கடிதத்தையும் அவர் தமிழக முதல்வரிடம் அளித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்