உல்லாசத்திற்கு வர மறுத்த மனைவி: கணவன் செய்த வெறிச்செயல்

திங்கள், 8 அக்டோபர் 2018 (08:54 IST)
திருச்சியில் மனைவி தன்னுடன் உல்லாசம் அனுபவிக்க வர மறுத்ததால் கணவன் மனைவியின் தலையை துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியை அடுத்த காட்டூரை சேர்ந்தவர் சங்கர் சகாயராஜ். இவருக்கும் ஜெசிந்தா ஜோஸ்பினுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
 
திருமணம் ஆன சில நாட்களில் கணவன் மனைவிக்கிடையே அவ்வப்போது சண்டை இருந்து வந்துள்ளது.
 
இந்நிலையில் நேற்று சங்கர் ஜெசிந்தாவை தாம்பத்ய உறவிற்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார். கணவன் மீது கோபத்தில் இருந்த ஜெசிந்தா கணவனின் ஆசைக்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.
 
இதனால் கடும் கோபமடைந்த சங்கர், ஜெசிந்தாவின் தலையை துண்டித்துவிட்டு காவல் நிலையத்தில் சரண்டர் ஆனார். ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்