சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்னணியை கண்டறிய சிபிஐ விசாரணை.. உச்சநீதிமன்றத்தில் மனு..!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (12:38 IST)
சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பங்கேற்றது அரசமைப்பு சாசனத்திற்கு முரணானது எனவும், அரசமைப்பு சாசனத்திற்கு முரணானது என அறிவிக்க கோரி ஜெகன்நாத் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்னணியை கண்டறிய சிபிஐ விசாரணை கோரி அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி, சிலவற்றை எதிர்க்க முடியாது, ஒழித்துதான் ஆக வேண்டும் என்று தெரிவித்தார் என்றும், சனாதன மாநாட்டில் உதயநிதி பேசியது நாடு முழுவதும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்றும், அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்படுமா அல்லது வேறு ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்