டெட் 2 தேர்வில் 95% பட்டதாரி ஆசிரியர்கள் தோல்வி!

புதன், 29 மார்ச் 2023 (10:26 IST)
டெட் 2 தேர்வில் 95% பட்டதாரி ஆசிரியர்கள் தோல்வி!
 
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்க ஆசிரியர் தகுதித் தேர்வில் 2 ஆம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை கணினி வழிவில் டெட் தேர்வுகள் காலை மற்றும் மாலை என மொத்தம் 2,54,224 பேர் எழுதியிருந்தனர். 
 
இந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2ம் தாள் தேர்வு எழுதியதில் 95% பட்டதாரிகள் தேர்ச்சி பெறவில்லை என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான தேர்வர்கள் தேர்வுக்கே வரவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.தேர்வு எழுதியவர்களில் 13,798 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் எனத் தகவல் கிடைத்துள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்