தமிழகத்தில் 746 அங்கீகாரம் பெறாத மெட்ரிகுலேசன் பள்ளிகள்

வியாழன், 2 ஜூன் 2016 (10:27 IST)
தமிழகத்தில், 746 அங்கீகாரம் பெறாத மெட்ரிகுலேசன் பள்ளிகள் செயல்படுவது பொது மக்களை பெரும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
 

 
சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் என்பவர் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழகம் முழுக்க 746 அங்கீகாரமற்ற  மெட்ரிகுலேசன் பள்ளிகள் செயல்பட்டு வருகிறன. இவைகள் அரசின் குறைந்தபட்ச விதிமுறைகளைக் கூட பின்பற்றுவதில்லை. ஆனால், இந்த பள்ளிக்களுக்கு மே 31 ஆம் தேதி வரை செயல்பட பள்ளிக் கல்வித்துறை தாற்காலிக அங்கீகாரம் வழங்கியது தவறு என்றும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை தமிழக அரசு பின்பற்றவில்லை என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், இந்த 746 பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக அங்கீகாரம் மே 31 ஆம் தேதியோடு முடிவடைந்துவிட்டதுஆனால், இந்தப் பள்ளிகளை மூட கல்வித்துறை அதிகாரிகள் இன்னும் முன்வரவில்லை. இதனால் சுமார் 5 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது, இப்பள்ளிகளுக்கு ஜூன் 30 வரை தற்காலிக காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் கூறப்பட்டது.
 
இதனையடுத்து, 5 லட்சம் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்