200 ஆம்புலன்ஸ்…530 மருத்துவர்கள், , 1,000 செவிலியர்கள் நியமனம் – முதல்வர் அதிரடி உத்தரவு !
இந்தியாவைபொருத்தவரைகொரோனாவால்உயிரிழந்தவர்களின்எண்ணிக்கை 17ஆகஉயர்ந்துள்ளது. மேலும், கொரோனாஉறுதிசெய்யப்பட்டோரின்எண்ணிக்கை 700-ஐகடந்துள்ளது. இந்நிலையில்தமிழகத்தில்மேலும் 6 பேருக்குகொரோனாபாதிப்புஉறுதிசெய்யப்பட்டுள்ளது.
மதுரையில் ஏற்கனவே கொரோனா தொற்று இருந்தவரின் குடும்பத்தில் மேலும் இருவருக்கும், ஈரோடு மற்றும் சென்னையில் தலா இருவரும் என 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனவால் பெருகியுள்ளவர்களைப் போன்று தமிழகத்தில் எந்த பாதிப்புகளும் நேராத வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல நல்ல திட்டங்களையும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.
இந்நிலையில், புதியதாக 200 ஆம்புலன்ஸுகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டுள்ளார்.
மேலும், காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் 530 மருத்துவர்கள் நியமனம் செய்யவும், 1,000 செவிலியர்கள், மற்றும் 1508 லேப்-டெக்னீசியன்கள் நியமனம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இன்னும் 3 நாட்களில் அவர்கள் பணியில் சேருமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.