திருப்பூர் அருகே கல்குவாரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

திங்கள், 18 ஜூலை 2016 (13:20 IST)
திருப்பூர் அருகே நண்பர்களுடன் கல்குவாரிக்கு குளிக்க சென்ற 2 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.


 

 
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஊஞ்சப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள், மயில்சாமி(12), சிவக்குமார்(4) ஆகியோர் அப்பகுதியில் உள்ள கல்குவாரிக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக சிவகுமாரும், மயில்சாமியும் தண்ணீரில் மூழ்கினர்.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவர்களின் நண்பர்கள் இது குறித்து ஊர்மக்களிடம் தெரிவித்தனர். உடனே பொதுமக்கள் விரைந்து சென்று கல்குவாரியில் மூழ்கிய 2 சிறுவர்களையும் பிணமாக மீட்டனர். இது பற்றி தகவல் அறிந்த பல்லடம் காவல் துறையினர் விரைந்து சென்று 2 சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
மேலும் இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

வெப்துனியாவைப் படிக்கவும்