கொரோனா பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்ட 19 பேர் ஓடும் பேருந்தில் இருந்து தப்பியோட்டம்!

வெள்ளி, 15 மே 2020 (12:01 IST)
வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்கள் தங்களை தாங்களே கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அனைத்து மாநில சுகாதாரத் துறையும் அறிவுறுத்தி வருகின்றன
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மானாமதுரைக்கு கொல்கத்தாவில் இருந்து சமீபத்தில் 19 பேரும் வந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக பேருந்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நிலையில் தங்களுக்கு கொரோனா இருக்குமா? என்ற அச்சத்தின் காரணமாக ஓடும் பேருந்திலிருந்து 19 பேரும் திடீரென குதித்து தப்பி ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இதனை அடுத்து மானாமதுரை பகுதியைச் சேர்ந்த சுகாதார துறையினர் மற்றும் காவல்துறையினர் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தப்பி ஓடிய 19 பேர்களை தேடும் பணியில் தீவிரமாக உள்ளனர். கொரோனா பரிசோதனைக்கு பயந்து 19 பேர்கள் தப்பி ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
ஏற்கனவே இன்று காலை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 43 வயது மதிக்கத்தக்க கோயம்பேடு வியாபாரி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென அவர் தப்பி ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்