16 எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: மகாராஷ்டிரா சபாநாயகரிடம் மனு

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (13:50 IST)
உத்தவ் தாக்கரே தரப்பைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
 
மகாராஷ்ட்ர மாநிலத்தில் தனது உத்தரவை மீறி வாக்களித்த 16 எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டுமென ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர். 
 
சபாநாயகர் அலுவலகம் இதனை உறுதி செய்துள்ளது. மேலும் 16 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளதால் மகாராஷ்டிர மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் என்று சிவசேனா கட்சி தலைவராக ஏக்நாத் ஷிண்டேவை அங்கீகரிக்கும் உத்தவ்தேவ் தாக்கரே தரப்பின் அஜய் செளத்ரியை நிராகரித்தும் சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்