இதையடுத்து, இன்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் நல மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மீனவர்களுக்கு 10 முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார்.
மானிய விலையில் வழங்கப்படும் டீசல், விசை படகுகளுக்கு 19000 லிட்டர், நாட்டுப் படகுகளுக்கு 4400 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.
மேலும், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் 3700 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும். 1000 நாட்டுப் படகு மீனவர்களுக்கு 40 சதவீத மானியத்தில் இயந்திரங்கள் அளிக்கப்படும் என்று 10 தெரிவித்துள்ளார்.