எனது பூங்காவில் காதல் இல்லை; கசையடிச் சத்தம் கேட்கின்றதா உனக்கு?

புதன், 2 மார்ச் 2016 (15:29 IST)
எனது பூங்காவில் காதல் இல்லை; கசையடிச் சத்தம் கேட்கின்றதா உனக்கு?
 
சிறைப்பட்டு சிதறி கிடப்பதை சுதந்திரம் என்பார்
விலங்குபூட்டி வீழ்ந்துகிடப்பதை விடுதலை என்பார்
தேசமும், மக்களும் சுரண்டப்படுவதை ஜனநாயகம் என்பார்..
 

 
அன்பே!
காதல் பிரபஞ்சத்தை மொழிபெயர்க்கின்றது!
உலகம் எனக்குள் உடைமாற்றுகின்றது!
சாதியும், மதமும் சாலை விபத்தில் மரணமடைகின்றது!
 
இரவும், பகலும் நீளும் அற்புதங்களின் தீராத முத்தம் - நான்
பூப்படைந்த அறிவை காண்கின்றேன்,
புனிதப்படுத்தும் அழகில் கரைகின்றேன்,
பசி நீர்த்துபோகாத அப்பத்தை சமைக்கின்றேன்
 
அதர்மம் ஆட்டுவிக்கும் கலகக்காரன்
எனது பூங்காவில் காதல் இல்லை;
கசையடிச் சத்தம் கேட்கின்றதா உனக்கு?
 
கவிதை : சூ.ராஜபிரபு

வெப்துனியாவைப் படிக்கவும்