அதிமுக, திமுகவுக்கு மாற்றாக தமிழகத்தில் வைகோயின் மதிமுக தலைமையில், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி,தமிழ் மாநில காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிட்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மக்கள் நலக்கூட்டணி என்ற கூட்டணியை 2015 ஆம் ஆண்டு அக்டோபரில் ஏற்படுத்தினர். இதில் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் முன்னிலைப்படுத்தினர். ஆனால் அந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.