தற்போது அந்த வரிசையில் இணைந்திருக்கிறது 'எமன்' படத்தின் "என் மேல கை வச்சா காலி..." பாடல். 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' - ராஜு மஹாலிங்கம் தயாரித்து வரும் 'எமன்' படத்தை இயக்கி வருகிறார் 'நான்' படப்புகழ் ஜீவா ஷங்கர். விஜய் ஆண்டனியின் இசையில் உருவாகி இருக்கும் "என் மேல கை வச்சா காலி..." பாடலை ஹேமச்சந்திரா பாட, அண்ணாமலை மற்றும் சேட்டன் எம் சி (ராப்) ஆகியோர் பாடல் வரிகள் எழுதியுள்ளனர்.
"என் மேல கை வச்சா காலி..அந்துடும் டா உன்னோட தாலி..." என்ற வார்த்தைகளையுடன் ஹிப் - ஹாப் தாளத்தில் ஆரம்பமாகும் பாடலை, தனக்குரிய தனித்துவமான பாணியில் இசையமைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி கூறலாம்..