பழமையான நம்பிக்கைகள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் சுபச்செலவுகள் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் மனகவலை ஏற்படலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவர்களுக்கான பொறுப்புகளை ஏற்கும் போது எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெறுவீர்கள். தடைபட்ட காரியங்கள் நல்லபடியாக நடக்கும். பெண்களுக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அரசியல்வதிகள் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.