ரத்தம் சம்பந்தமான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. எந்த ஒரு வேலையை செய்யும் போதும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். வீடு, வாகனம் வாங்கும் சுபச்செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
பெண்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. கலைத்துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். செல்வநிலை உயரும். இறுக்கமான சூழ்நிலை மாறும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்துடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எடுத்துக் கொண்ட காரியங்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது மாணவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்