கடின உழைப்பில் ஸ்திரமான வளர்ச்சியை பெறும் ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.
தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் எடுத்த வேலையை கொடுத்த நேரத்தில் முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.