நண்டு மிளகு மசாலா செய்ய வேண்டுமா...?

தேவையான பொருட்கள்:
 
நண்டு - 500 கிராம்
வெங்காயம் - 5
தக்காளி - 2
மிளகு - 3 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 15 பல்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
தனியா தூள் - 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
முதலில் மசாலாவை தயார் செய்யலாம். அதற்கு மிக்சி ஜாரில் நாம் எடுத்து வாய்த்த மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி  விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
 
பிறகு கடாயை அடுப்பில் வைத்துக்கொண்டு சூடேறியதும் நல்லெண்ணெய் சேர்த்துக்கொண்டு எண்ணெய் சூடேறியதும் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம்,  கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
 
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, மேலும் நாம் எடுத்து வைத்திருக்கும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மற்றும் நறுக்கிய தக்காளி ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும்.
 
இதனை சுமார் 5 நிமிடங்கள் வதக்கிய பிறகு நாம் சுத்தம் செய்து எடுத்து வைத்திருக்கும் 500 கிராம் நண்டை அதில் சேர்த்து கொள்ளவும். பிறகு சிறிதளவு தண்ணீர்  ஊற்றி மூடி போட்டு மூடி வைத்துவிட்டு சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு லேசாக கிளறிவிட்டு இறக்கி விடவும். அவ்வளவு தான் சுவையான நண்டு  மிளகு மசாலா தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்