சைனீஸ் சிக்கன் வறுவல் செய்ய....!

Webdunia
தேவையானவை:
 
கோழிக்கறி (சிக்கன்) - 1/2 கிலோ
சோயா சாஸ் - 1 கப்
வினிகர் - ½ கப்
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 2
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
கார்ன்ப்ளார் - 3 மேசைக்க்ரண்டீ
அஜினோமோட்டோ - ¼ தேக்கரண்டி
மைதா - 2 மேஜைக்கரண்டி
உப்பு, மஞ்சள் - தேவையான அளவு
டால்டா - பொரிப்பதற்கு (அ) எண்ணெய்
செய்முறை: 
 
கோழியை எலும்புடன் சிரு உருண்டை துண்டுகளாக வெட்டி, அதனை நன்றாக சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும். அரைத்த வெங்காயம், மிளகுத்தூள், சாஸ், வினிகர், அஜினோமோட்டோ, உப்பு, மஞ்சள் சேர்த்து அரை மணிநேரம் ஊறவைக்க வேண்டும். சிக்கனை குக்கரில் அரைவேக்காடு வேக வைக்கவும்.
 
பின்னர் கார்ன் ப்ளார், மைதா மாவையும் தண்ணீர் விட்டு கரைத்து வெந்த துண்டுகளை மட்டும் எடுத்து மாவில் தேய்த்து கடாயில் காயும் டால்டாவில் போட்டு இரண்டிரண்டாக சிவக்க பொரித்து எடுக்கவும். சுவையான சைனீஸ் சிக்கன் வறுவல் தயார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்