அமர்க்களப்படுத்தும் ஆயிரத்தில் ஒருவன் வசூல்

புதன், 26 மார்ச் 2014 (14:23 IST)

எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவனை டிஜிட்டலில் மேம்படுத்தி வெளியிட்டனர். இந்தப் படம் வெளியாவதை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தார்.
 

சரி, படத்துக்கு ஆதரவு எப்படி?

பொதுவாக முதலிரண்டு தினங்களுடன் ரசிகர்களின் ஆரவாரமும், பாலாபிஷேகமும், பட்டாசு வெடித்தலும் நின்றுவிடும். ஆயிரத்தில் ஒருவனுக்கு இரண்டாவது வாரத்திலிலும் இந்த அமர்க்களங்கள் தொடர்கின்றன.


சென்ற வார இறுதியில் சென்னை சிட்டியில் மட்டும் 7.9 லட்சங்களை இப்படம் வசூலித்துள்ளது. வார நாள்களில் வசூல் 2.8 லட்சங்கள். இதுவரை சென்னை சிட்டியில் மட்டும் 37.7 லட்சங்களை வசூலித்துள்ளது.
 

எம்ஜிஆர் ரசிகர்களின் டார்கெட் சென்னை அண்ணாசாலையில் இயங்கும் தேவி காம்ப்ளக்ஸ். இங்குள்ள தேவி பாரடைஸில் தினமும் எம்ஜிஆர் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து எம்ஜிஆர் பக்தர்கள் பரவசம் கொள்கின்றனர்.

சிவாஜியின் கர்ணன் வசூலை தாண்ட வேண்டும் என்பதே எம்ஜிஆர் பக்தர்களின் ஒரே நோக்கம். கர்ணன் இயல்பாக நடத்திய சாதனையை இவர்கள் கஷ்டப்பட்டாவது சாதித்து விடுவார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்