பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால், அதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக, சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலுள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் 24794709 என்ற தொலைபேசி எண் அமைக்கப்படும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மற்றும் புறநகர் மக்கள் சுற்றுலா பொருட் காட்சி, அண்ணா சதுக்கம், காந்தி மண்டபம், வி.ஜி.பி., முட்டுக்காடு, கோவளம், எம்.ஜி.எம்., மாமல்லபுரம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிஷ்கிந்தா, குயின்ஸ் லாண்டு போன்ற பல்வேறு சுற்றுலா மையங்களுக்கு சென்று வர ஏதுவாக, 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால், அதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக, சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலுள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் 24794709 என்ற தொலைபேசி எண் அமைக்கப்படும். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.