அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நிம்மதி- ஆள், சம்பளம் கிடையாது என அறிவிப்பு
வெள்ளி, 16 நவம்பர் 2012 (15:48 IST)
ஆள்குறைப்போ, சம்பள குறைப்போ இப்போதைக்கு செய்யப்பட மாட்டாது என அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிலவும் நிதிச் சிக்கலை கருத்தில் கொண்டு ஆள்குறைப்பு மற்றும் சம்பள குறைப்பு குறித்த பரிந்துரைகளை பல்கலைக்கழக நிர்வாகம் முன்வைத்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக ஊழியர்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து பல்கலைக்கழகத்தற்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரச்சனைக்கு தீர்வு காண பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு இன்று சென்னையில் கூடியது. இதில், பல்கலைக் கழகத்தில் நிலவும் நிதிச் சிக்கலுக்கு தீர்வு காணும் நோக்கில் நிபுணர் குழு ஒன்றை அமைப்பது எனவும், அதன் பரிந்துறைகள் கிடைக்கப்பெற்றவுடன் அதன் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அதுவரை, ஆள்குறைப்பும், சம்பள குறைப்பும் செய்வதில்லை என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.