பரம‌க்குடி து‌‌ப்பா‌க்‌கி சூடு வழ‌க்கு ஜூலை‌க்கு த‌ள்‌ளிவை‌ப்பு

வெள்ளி, 20 ஜனவரி 2012 (13:12 IST)
பரமக்குடி துப்பாக்கிசசூடவழக்கவிசாரணையை ஜூலை மாத‌த்‌து‌க்கு உச்ச நீதிமன்றம் த‌ள்‌ளிவை‌த்து‌ள்ளது.

தமிழமக்களமுன்னேற்கழகத்தினதலைவரஜானபாண்டியனமனைவி பிரிசில்லபாண்டியன் தொட‌ர்‌ந்த வழ‌‌க்‌கி‌ல், பரம‌க்குடி து‌ப்பா‌க்‌கி சூ‌ட்டி‌ல் ப‌லியானவ‌‌ர்க‌ளி‌ன் குடு‌ம்ப‌ங்களு‌க்கு ரூ.10 ல‌ட்ச‌ம் ‌நிவாரண உத‌வி வ‌ழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

மேலு‌ம், பரம‌க்குடி‌யி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் து‌ப்பா‌‌க்‌கி சூடு நட‌த்‌தியது ‌நியாய‌ம்தானே எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றியு‌ள்ள அவ‌ர், து‌ப்பா‌‌க்‌கி சூடு ம‌னித உ‌ரிமை ‌மீ‌றிய செய‌ல் எ‌ன்று‌ம் து‌ப்பா‌க்‌கி சூடு நட‌த்‌திய காவ‌ல‌ர்க‌‌ள் ‌மீது வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்ய வே‌ண்டு‌‌ம் எ‌‌ன்று மனு‌வி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்த மனு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி கோதா, கோகலே ஆ‌‌கியோ‌‌ர் கொ‌ண்ட அம‌ர்வு மு‌ன்பு இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, ஆந்திராவிலநடந்துப்பாக்கிசசூடவழக்கோடசேர்த்தவிசாரி‌ப்பதாக கூ‌றிய ‌நீ‌திப‌திக‌ள், இர‌ண்டு வழக்குகளையு‌ம் ஜூலமாத‌த்து‌க்கு த‌ள்‌ளிவை‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்