கூட‌ங்குள‌ம் ‌விவகார‌த்த‌ி‌ல் த‌மிழக அரசு இர‌ட்டை வேட‌ம் - வைகோ

சனி, 5 நவம்பர் 2011 (11:45 IST)
கூட‌ங்குள‌ம் ‌விவகார‌த்த‌ி‌ல் த‌மிழக அரசு இர‌ட்டை வேட‌ம் போடு‌வதாக ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

கூட‌ங்குள‌ம் அணு‌‌மி‌ன் ‌நிலைய‌த்தை மூட‌க் கோ‌ரி இடி‌ந்தகரை‌யி‌ல் 19வது நாளாக இ‌ன்று நட‌ந்து வரு‌ம் உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌‌ற்கு வைகோ வைகோ தலைமை தா‌ங்‌கியு‌ள்ளா‌ர்.

இ‌ந்த உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்‌ட‌த்‌தி‌ல் தூ‌த்து‌க்குடி, நெ‌ல்லை, க‌ன்‌னியாகும‌ரி மாவ‌ட்ட ம.‌தி.மு.க.‌ தொ‌ண்ட‌ர்க‌ள் ப‌ங்கே‌ற்று‌ள்ளன‌ர்.

உ‌ண்ணா‌விரத‌ப் ப‌ந்த‌தி‌ல் பே‌சிய வைகோ, கூட‌ங்குள‌ம் போரா‌ட்ட‌த்தை ம‌த்‌திய அரசு கொ‌‌ச்சை‌ப்படு‌த்தாக கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌‌ர்.

கூட‌ங்குள‌ம் ‌விவகார‌த்த‌ி‌ல் த‌மிழக அரசு இர‌ட்டை வேட‌ம் போடு‌கிறது எ‌ன்று புகா‌ர் கூ‌றிய வைகோ, அணுஉலையை மூட வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌த‌மிழக அரசு தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌‌லியுறு‌த்‌தினா‌ர்.

பண‌ம் பெ‌ற்று‌க் கொ‌ண்டு பா‌தி‌ரியார்க‌ள் போரா‌ட்ட‌ம் செ‌ய்வதாக கூறுவத‌ற்கு‌ வைகோ க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கூட‌ங்குள‌ம் போரா‌ட்ட‌த்தை அ‌ன்‌னியச‌க்‌திக‌ள் தூ‌ண்டுவதாக ம‌த்‌திய அரசு கூறுவது தவறு எ‌ன்று வைகோ கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்