‌திரு‌விழா ச‌ந்தை‌யி‌ல் ரூ.5 லட்சத்திற்கு விற்பனைக்கு வந்த கு‌திரை

வியாழன், 11 ஆகஸ்ட் 2011 (10:22 IST)
webdunia photo
WD
தமிகழம், கர்நாடகா மக்களிடையே பிரசித்தி பெற்ற ஈரோடு குருநாதசாமி கோவில் தேர் திருவிழா குதிரை சந்தையுடன் தொடங்கியது. இ‌ந்த ச‌ந்தை‌யி‌ல் ஒரு கு‌திரை 5 ல‌ட்ச ரூப‌ா‌ய்‌க்கு ‌வி‌ற்பனை‌க்கு வ‌ந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது புதுப்பாளையம். இங்குள்ளது குருநாதசாமி கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் இறுதியில் தேர் திருவிழா நடப்பது வழக்கம்.

இந்த விழாவை முன்னிட்டு குதிரை, மாடு, ஆடு போன்ற கால்நடைகள் சந்தை நடப்பது வழக்கம். இந்த சந்தை தமிழ்நாடு, கர்நாடகா மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இரு மாநிலங்களில் இருந்து பலவகை குதிரை ரகங்கள் மாடு, ஆடு ரகங்கள் இங்கு விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இந்த வருடத்தின் விழா நேற்று மாலை துவங்கியது. இந்த விழாவை முன்னிட்டு விறுவிறுப்பாக குதிரை சந்தையும் தொடங்கியது.

இந்த சந்தையில் பலவகையான குதிரைகள் விற்பனைக்கு வந்தது. இந்த குதிரைகள் பாட்டிற்கு தகுந்தாற்போல் நடனமாடி பார்வையாளர்களை அசத்தியது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்ததை சேர்ந்த இளங்கோ என்பவரது மார்வார் இனத்தை சேர்ந்த முழுவதும் கருப்பு நிறம் கொண்ட குதிரை நடிகர் சூர்யாவுடன் 'ஏழாம் அறிவு' என்ற படத்தில் நடித்துள்ளது. இந்த குதிரையில் விலை ரூ.5 லட்சமாகும். இதுதவிர லட்சக்கணக்கான விலை கொண்ட குதிரைகள் விற்பனைக்கு வந்தது.

இதேபோல் காங்கயம் காளைகள், குஜராத் மாநிலத்தின் ஜாப்ராபாடி என்ற வகை எருமை, கிர் இன மாடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிரோகி இன ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இதேபோல் இந்த ஆண்டு பூனையும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. பெர்சியன்கேர் என்ற இனத்தை சேர்ந்த பூனை ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனைக்கு வைக்கப்பட்டது. இந்த மாட்டு சந்தை வரு‌ம் 13ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து குதிரை, ஆடு, மாட்டு ரகங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்