காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சொன்னால் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் என்று முன்னாள் முதலமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரங்கசாமி ஆட்சிக்கு எதிராக மக்களைத் தூண்ட மாட்டோம் என்றும் மக்களாகப் போராட்டம் நடத்தினால் அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம் என்றும் கூறினார்.
ரங்கராமி அரசுக்கு எங்கள் ஒத்துழைப்பு வேண்டுமென்றால் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் பேச வேண்டும் என்று கூறிய வைத்திலிங்கம், சோனியா காந்தி ஆதரவளிக்கச் சொன்னால் வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம் என்றார்.