இலங்கை நிறுவனங்கள் சென்னை கண்காட்சியில் பங்கு பெற அனுமதிக்கக் கூடாது: சீமான்

செவ்வாய், 21 ஜூன் 2011 (13:36 IST)
FILE
சென்னவர்த்தக மையத்தில் வரும் 23 முதல் 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இல்ல உள்வடிவமைப்பமற்றும் அலங்காரப் பொருட்கள் கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த நிறுவனங்கள் எதையுமபங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

இது குறித்து சீமான் விடுத்துள்ள அறிக்கவருமாறு:

“சென்னநந்தம்பாக்கத்தில் தொழில், வணிக கண்காட்சிகள் நடத்தப்படும் சென்னை வர்த்தமையத்தில் வரும் 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை இல்ல உள்வடிவமைப்பு மற்றுமஅலங்காரப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சி (21st Edition of India’s Premier Exhibition on Interior Design, Furniture, Furnishing and Décor Accessories) நடைபெறவுள்ளது. ஜாக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் எனும் நிறுவனம் இந்கண்காட்சியை ஏற்பாடு செய்கிறது.

21வதஆண்டாக நடைபெறும் இந்த பன்னாட்டு கண்காட்சியில் கிழக்காசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன என்றகண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் விநியோகித்த துண்டறிக்கையிலகூறப்பட்டுள்ளது.

இலங்கையிலதமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போரில் ஒன்றரை இலட்சம் மக்களைக் கொன்று குவித்அந்நாட்டு அரசுத் தலைவர்களை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்றும், ஈழததமிழர்களுக்கு சம உரிமை அளிக்க மறுத்து வரும் அந்நாட்டிற்கு எதிராக பொருளாதார தடையகடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையிலஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழ் மண்ணில் நடைபெறுமகண்காட்சியில் இலங்கை நிறுவனங்களின் பங்கேற்பை அனுமதிப்பது என்பது தமிழக சட்டபபேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையுமஅவமதிப்பதாகும்.

எனவே, சென்னை கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் இலங்கையில் இருந்து வரும் எந்த நிறுவனத்தையுமசென்னைக் கண்காட்சியில் பங்கு பெற அனுமதிக்கக் கூடாது. இலங்கையில் தயாரிக்கப்பட்எந்த பொருட்களும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறச்செய்யவும் அனுமதிக்கக் கூடாதஎன்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

எங்களினவேண்டுகோளையும் மீறி, இக்கண்காட்சியில் இலங்கை நிறுவனங்களோ அல்லது பொருட்களோ பங்கபெற அனுமதிக்கப்பட்டால் அதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி போராடும் என்பதைததெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்