ஜி.ராமகிருஷ்ணன் உட்பட 750 பேர் கைது

வெள்ளி, 31 டிசம்பர் 2010 (13:41 IST)
நாகர்கோவிலில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் உட்பட 750 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் வனப் பாதுகாப்பு சட்டத்தை திரும்ப பெற கோரிக்கை வைத்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மாநில செயலாளர் உட்பட எம்.எல்.ஏ., க்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகர் கோயிலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கி.ராமக்ரிஷ்ணன் தமிழக அரசைக் கண்டித்தும், காங்கிரஸ், பா.ஜ.க. மீதும் கடும் விமர்சனத்தை வைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்