‌நி‌தி ‌நிறுவன அ‌‌திப‌ர் கொலை‌யி‌ல் ஜா‌ன் பா‌ண்டிய‌ன் ‌உ‌ள்பட 5 பே‌ர் விடுதலை

வெள்ளி, 3 டிசம்பர் 2010 (13:43 IST)
கோவை ‌நி‌தி ‌நிறுவன அ‌திப‌ர் ‌விவேகான‌ந்த‌ன் படுகொலை செ‌ய்ய‌ப்ப‌ட்ட வழ‌க்‌கி‌ல் தமிழமக்களமுன்னேற்றககழக‌த் தலைவ‌ர் ஜா‌ன் பா‌ண்டிய‌ன் உ‌ள்பட 5 பே‌ரை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் விடுதலை செ‌ய்து‌ள்ளது.

கோவையை சே‌ர்‌‌ந்த நி‌‌தி ‌நிறுவன அ‌திப‌ர் ‌விவேகா‌‌னந்த‌ன் கட‌ந்த 1993 ஆ‌‌ம் ஆ‌ண்டு படுகொலை செ‌ய்ய‌ப்‌ப‌ட்டா‌ர். இ‌ந்த கொலை தொட‌ர்பாக க‌ல்லூ‌ரி அ‌திப‌ர் வெ‌ங்க‌ட்ராம‌ன், ஜா‌ன் பா‌ண்டிய‌ன், பவு‌ன்ரா‌ஜ், குமா‌ர் உ‌ள்பட 11 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இ‌ந்த வழ‌க்கை ‌விசா‌ரி‌த்த கோவை ‌நீ‌திம‌ன்ற‌ம் கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்ட 11 பே‌ரி‌ல் 9 பேரு‌க்கு ஆயு‌ள் த‌ண்டனை ‌வி‌தி‌த்‌து கட‌ந்த 1993ஆ‌ம் ஆ‌ண்டு ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது.

இ‌ந்த ‌தீ‌ர்‌‌ப்பை தொட‌ர்‌‌ந்து ஜா‌ன் பா‌ண்டிய‌ன், வெ‌ங்க‌ட்ரா‌ம‌ன் உ‌ள்பட 11 பே‌ர் ‌‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டன‌ர். இ‌தி‌ல் க‌ல்லூ‌ரி அ‌திப‌ர் வெ‌ங்க‌ட்ராம‌ன் கட‌ந்த ஆ‌ண்டு ச‌ிறை‌யி‌ல் ‌த‌ற்கொலை கொ‌ண்டா‌ர்.

த‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌‌ர்க‌ளி‌ல் ‌பி‌ரி‌ன்‌ஸ் பாளைய‌ங்கோ‌ட்டை ம‌த்‌திய ‌சிறை‌யி‌ல் மாரடை‌ப்பா‌ல் மரண‌ம் அடை‌ந்த‌ா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌‌ந்து ஜா‌ன் பா‌ண்டிய‌ன் உ‌ள்பட 7 பே‌‌ர் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் மே‌ல்முறை‌யீ‌டு செ‌ய்தன‌ர். இ‌ந்த மே‌ல்முறை‌யீ‌‌ட்டு மனுவை‌ ‌விசா‌ரி‌த்து இ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்த உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌ம் ஜா‌ன் பா‌ண்டிய‌ன் உ‌ள்பட 5 பேரை ‌விடு‌‌வி‌த்தது.

ஆனா‌ல் எ‌ஞ்‌சிய பவு‌ன்ர‌ா‌ஜ், குமா‌‌ர் ஆ‌கியோ‌ரி‌ன் ஆயு‌ள் த‌ண்டனை உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌ம் உறு‌தி செ‌ய்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்