3 ஆ‌ண்டு‌க்கு ‌பிறகு மேட்டூர் அணை ‌நிர‌ம்பு‌கிறது

சனி, 27 நவம்பர் 2010 (12:53 IST)
3 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு மே‌ட்டூ‌ர் அணை ‌நீ‌ர்ம‌‌ட்‌ட‌ம் அத‌ன் முழு கொ‌ள்ளளவான 120 அடியை எ‌ட்ட உ‌ள்ளது.

மே‌ட்டூ‌ர் அணை‌‌யி‌ன் ‌மொ‌த்த ‌நீ‌ர்ம‌ட்ட‌ம் 120 அடியை கொ‌ண்டது. த‌‌ற்போது அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 116.58 அடியாக உ‌ள்ளது.

அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 320 கனஅடி ‌நீ‌ர் வ‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

அணை நிரம்ப இன்னும் 4 அடியே தேவை எ‌ன்பதா‌ல் 3 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை இந்தாண்டு நிரம்ப உ‌ள்ளது. இதனா‌ல் ‌கா‌வி‌ரி டெ‌ல்டா மாவ‌ட்ட ‌விவசா‌யிக‌ள் ம‌கி‌ழ்‌ச்‌சி அடை‌ந்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்