இசையமைப்பாளர் சந்திரபோஸ் கவலைக்கிடம்

செவ்வாய், 28 செப்டம்பர் 2010 (09:16 IST)
கல்லீரல், சிறுநீரக கோளாறு காரணமாக மரு‌த்துவமனையில் அனுமதிக்கப்பட்டு‌ள்ள சினிமா இசையமைப்பாளர் சந்திரபோஸ் கவலைக்கிடமான ‌நிலை‌யி‌ல் ‌‌சி‌கி‌ச்சை பெ‌ற்று வரு‌கிறா‌ர்.

வி.சி.குகநாதன் இ‌ய‌க்‌கிய 'மதுரகீதம்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சந்திரபோஸ். ராஜா சின்ன ரோஜா, விடுதலை உள்பட 120 படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

60 யதான சந்திரபோசுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லீரல், சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அதற்காக ‌ிகிச்சை பெற்று வந்த அவ‌ர், கடந்த 24ஆ‌ம் தேதி உடல்நிலை மோசம் அடைந்தது. உடனடியாக சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் மருத‌்துவமனை‌யி‌ல் அனுமதிக்கப்பட்டார்.

மரு‌த்துவ‌ர்க‌ள் தீவிர சிகிச்சை அளித்தும், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. நேற்று முன்தினம் அவர் நினைவிழந்து, கோமாவில் மூழ்கினார். அவரை வீட்டுக்கு எடுத்துச் செல்லும்படி மரு‌த்துவ‌ர்க‌ள் கூறிவிட்டார்கள்.

சந்திரபோசின் வீடு, சென்னை மைலாப்பூரில் உள்ளது. அங்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் ஆகிய இருவரும் நேரில் சென்று பார்த்தார்கள்.

சந்திரபோசை சிகிச்சைக்காக சென்னை பொதுமருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்னர். அதன்படி, சந்திரபோஸ் பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மரு‌த்துவ‌ர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்