10 மாவட்டங்களில் கூடுதல் மழை

வியாழன், 3 டிசம்பர் 2009 (20:41 IST)
த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் வடகிழக்கு பருவ மழை‌ கால‌த்‌தி‌ல் மு‌ன்பு எ‌ப்போது‌ம் இ‌ல்லாத அள‌வாக 10 மாவட்டங்களில் கூடுதலாக மழை பெய்துள்ளது. இ‌தி‌ல் ‌மிக அதிகமாக நாகப்பட்டின‌ம் மாவட்டத்தில் 860 மிமீ மழை பெய்துள்ளது. இது மு‌ன்பு இ‌ல்லாத அளவை ‌விட 30 ‌விழு‌க்காடு கூடுதலாகும்.

இம்மாவட்டத்தில் இயல்பான மழை அளவு 660 மிமீ ஆகும்.

இதே போல் நீலகிரியில் 820 மிமீ, கடலூரில் 702 மிமீ, திருவாரூரில் 613 மிமீ, திருநெல்வேலியில் 521 மிமீ, தஞ்சாவூர் 506 மிமீ, விழுப்புரத்தில் 511 மிமீ, ராமநாதபுரத்தில் 496 மிமீ, தூத்துக்குடியில் 451 மிமீ, திண்டுக்கல்லில் 397 மிமீ மழையும் பெய்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை பெய்த காலத்தில் இம்மாவட்டங்களில் எப்போதும் இல்லாத அளவாக கூடுதல் மழை பெய்துள்ளது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரையிலான காலத்தில் இம்மழை பெய்துள்ளது.

நீலகிரியில் 154 சதவீதமும், திருநெல்வேலியில் 53 சதவீதமும், விழுப்புரம் மாவட்டத்தில் 31 சதவீதமும், கடலூரில் 26 சதவீதமும், ராமநாதபுரத்தில் 28 சதவீதமும், திருவாரூரில் 25 சதவீதமும், தூத்துக்குடியில் 36 சதவீதமும், திண்டுக்கல்லில் 20 சதவீத மழையும் கூடுதலாக பெய்துள்ளது. இதே போல் புதுச்சேரியிலும் 26 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது.

சென்னை, அரியலூர், கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திருவண்ணாமலை, திருச்சி, மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் இயல்பான அளவே மழை பெய்துள்ளது.

தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இயல்புக்கு குறைவான அளவு மழையே பதிவாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்