'பசங்க' இயக்குநர் பாண்டிராஜூக்கு சர்வதேச விருது

சனி, 21 நவம்பர் 2009 (19:41 IST)
ஹைதராபாத்: `சுப்பிரமணியபுரம்' இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தயாரிப்பில் வெளியான `பசங்க' படத்தை இயக்கிய பாண்டிராஜூக்கு சர்வதேச திரைப்பட விருது வழங்கப்பட்டது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் இந்த விருது அவருக்கு கிடைத்தது.

குழந்தைகளை மையமாகக் கொண்ட படம் `பசங்க'. இப்படம் ஹைதராபாத்தில் நடைபெற்ற 16ஆவது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில், ஆசியப் படங்கள் பிரிவில் திரையிடப்பட்டது.

இதையடுத்து இப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் சிறந்த இயக்குநருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு, விருதினைப் பெற்றார்.

இந்த விருதை நடிகை ஜூஹி சாவ்லா பாண்டிராஜிடம் வழங்கினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்